கனடா பாராளுமன்றத்திற்க்குள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி பிரயோகம்

னடாவின் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்தை அண்மித்திருந்த நினைவிடம் ஒன்றில் பாதுகாப்பிற்கு நின்ற சிப்பாயை துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

அவரை கனேடிய பொலிசார் விரட்ட நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அவர் நுழைந்துள்ளார்.



சிப்பாய்களாலும் பொலிசாரும் சூழ்ந்துகொள்ள நாடாளுமன்றம் அடைக்கப்பட்டுள்ளது.


கருப்பு உடையணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்தி வந்ததைப் பார்த்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருக்க பொலிசார் பதுங்குவதை நாடாளுமன்றத்துக்குள் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் காட்டுகின்றன.

சென்ற துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக கட்டிடத்தை பொலிசார் தேடிவருகின்றனர்.

ஒட்டாவாவில், ஜன்னல்களை ஒட்டியும், மேற்கூரையிலும் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை, குறைந்த அளவில் இருந்து மத்திய அளவுக்கு அரசாங்கம் அறிவித்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த திங்களன்று கியுபெக் நகரில் அண்மையில் இஸ்லாத்துக்கு மாறியிருந்த நபரொருவர் கனடிய சிப்பாய்கள் இருவர் மீது காரைக் கொண்டுவந்து மோதி அதில் ஒருவரைக் கொன்றும் ஒருவரைக் காயப்படுத்தியும் இருந்தார். அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றிருந்தனர்.

கனடா பாராளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளதாக தகவல் :

கனடா பாராளுமன்றத்திற்க்குள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டா யுத்த நினைவகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு அரசகட்டிடங்களை நோக்கி ஒடியதாகவும், பின்னர் அப்பகுதியில் பல துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கனடா தனது பாதுகாப்பை அதிகரித்து சில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப தக வுல்கள் தெரிவிக்கின்றன. அவ்வேளை பாராளுமன்றத்திற்க்குள் இருந்த பிரதமர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :