பறகஹதெனிய,காத்தான்குடி,அக்கரைப்பற்று,சாய்ந்தமருது,மருதமுனை,நிந்தவூர்,பாலமுனையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை நிகழ்வுகள்.

அக்கரைப்பற்று - நிஸ்மி- 
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களால் இன்று (06.10.2014) கொண்டாடப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று ஜும்ஆபெரிய பள்ளிவாயலில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் போது பேஷ் இமாம் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம். பைஸால் மௌலவி ஹஜ்ஜின் மகத்துவம்பற்றி பயான் நிகழ்த்துவதையும், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ.அப்துல் லெத்தீப் துஆப் பிரார்த்தனை செய்வதையும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.




சாய்ந்தமருது - ஹாசிப் யாஸீன்-சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது.  சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும்இ கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும்இ குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.
ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கத்தினையும் மௌலவி முபாறக் நிகழ்த்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேசமயம் சாய்ந்தமருது கடற்கரை முன்றலில் ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் ஆகியோரின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மருதமுனை ,பி.எம்.எம்.ஏ.காதர்-
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழகை இன்று (06-10-2014) காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை  திறந்த வெளியில் நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி  பிரசங்கமும் செய்தார் பெரும் அளவிலான ஆண்களும், பெண்களும் தொழுகையில்; கலந்து  கொண்டார்கள்.




நிந்தவூர் ,ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிந்தவூர் தப்லீக் ஜமாஅத்தினர், தௌஹீத் ஜமாஅத்தினர் ஆகியோர் இம்முறை  ஒரே நாளில், ஒரே நேரத்தில் பெருநாள் தொழுகைகளை நடாத்தியது விசேட அம்சமாக் காணப்பட்டது.
01. இம்முறை தப்லீக் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை  நிந்தவூர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகை  மௌலவி.ஏ.எம்.றிபாய் காஸிபி அவர்களினால் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து,  நிந்தவூர் உலமா சபைத் தலைவர் மௌலவி. எம்.ஐ.எம்.ஜஃபர் பலாஹி அவர்களினால் குத்பா  பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.
இதில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அதே வேளை பாராளுமன்ற  உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.பைசால் காசீம், மாகாண சபை  உறுப்பினர் சட்டத்தரனி.ஆரீப் சம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டு,  சிறப்பித்தனர்.
02. இதே வேளை நிந்தவூர் ஜாமி உத் தௌஹீத் ஜும்ஆப்பள்ளிவாசல் ஏற்பாட்டிலான  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி விளையாட்டு  மைதானத்தில் இடம் பெற்றது.
பெருநாள் தொழுகை, குத்பா பிரசங்கம் ஆகியவை மௌலவி.எம்.எச்.றியாழ் காஸிபி  அவர்களினால் நடாத்தப்பட்டது. இங்கும் பல்லாயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.



பாலமுனை,பைஷல் இஸ்மாயில்-
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப் பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இன்று (06) ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மொளலவி ஐ.எல்.எம். ஹாஸிம்(மதனி) கலந்து கொண்டு தொழுகையினையும், கொத்பா பேருரையும் நடாத்தி வைத்தார்.



பறகஹதெனிய,இக்பால் அலி-ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசிலில்  அஷ;nஷய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல் (ஸலபி) நடத்தி வைத்து சொற்பொழிவாற்றுவதைப்  படங்களில் காணலாம்.


காத்தான்குடி,பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல்; ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இங்கு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் அல்ஹாபிழ் மௌலவி எம்.எஸ்.அப்துல் காதர் (பலாஹி) நிகழ்த்தினார்.
இவ் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.







காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் பல ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்;)
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வழமையாக ஏற்பாடு செய்துவரும் இந்தத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் எம்.ஏ.ஹாலிதீன் பலாஹி நிகழ்த்தினார்.
இத்திடல் தொழுகையில் உலமாக்கள்,அரசியல்வாதிகள்,ஊர்பிரமுகர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் இத்திடல் தொழுகையில் ஆண் பெண் கலப்பில்லாதவாறு ஒழுங்குகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :