மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் முதலாவது மாபெரும் சிரமதான நிகழ்வு 04-10-2014 சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் எம்.எப்.எம்.பிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உப தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜௌஸகி ,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப்,அதன் பொருளாளர் எம்.ஏ.எம்.அல்பர்,உப செயலாளர் எம்.என்.எம்.பஸ்லி உட்பட அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயல் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் மாபெரும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment