%2Bcopy.jpg)
பழுலுல்லாஹ் பர்ஹான்-
முஸ்லிம்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் அமைக்கப்படும் முஸ்லீம்களின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை (மியூசியம்) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் பழைய காத்தான்குடி நகர சபை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியில்; அமைக்கக்கட்டு வருகின்ற இந்த இஸ்லாமிய நூதன சாலையில் நிர்மாணப் பணிகள் தற்போது துரித கெதியில் நடைபெற்று வருவதாக தொல்பொருல் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவிக்கின்றது.
முழு இலங்கையினையும் மையமாகக் கொண்டு காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு வரும் இவ் நூதனசாலையில் (மியூசியத்தில்) இஸ்லாமியர்களின் பண்டைய வாழ்க்கை முறைகள்,கலாசார நடைமுறைகள்,அவர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய உபகரணங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உருவாக்கங்கள் பற்றிய விடயங்களை இலகுவாக எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்;கு வாய்பு செய்யப்படவுள்ளது.
இந் இஸ்லாமிய நூதன சாலையை நிறுவுவதற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளில் கலாசார மரபுரிமைகள் அமைச்சு மற்றும் பொருளர்தார அபிவிருத்தி அமைச்சும் நிதி உதவிகளை வழங்கி இருக்கின்றன.
இந் நிதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான இஸ்லாமிய பாரம்பரிய உபகரணங்கள் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் கொள்வனவு செய்யப்பட்டு வருவதுடன் புதிய நான்கு மாடி அழகிய கட்டிடத் தொகுதியும் தற்போது துரித கெதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இவ் நூதனசாலையின் அபிவிருத்தி வேலைகளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொல்பொருல் ஆராய்ச்சி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.வருணி மற்றும் தொல்பொருல் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் சகிதம் 02-10-2014 இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இனைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment