.jpg)
பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் நடைபெற்ற பொல்லடி (களிகம்பு) பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் பொல்லடி அரங்கேற்றமும் இன்று வியாழக்கிழமை (02) மாலை நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரீ.கே. அதிஸ்ஸயராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கப் பணிப்பாளர் ஏ.டபிள்யு.ஏ. விக்ரம ஆராச்சி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். அம்ஜத், கலாசார நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ஏ. எச். றிம்சான், மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம். ஜௌபர், நிருவாக உத்தியோகத்தர்ஏ. றபியதீன், கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் உட்பட பிரதேச கலைஞர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவர்கள் இப் பொல்லடி பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment