வேறு வேறு தினங்களில் பெருநாள் அனுஷ்டிப்பதென்பது அனுமதிக்க முடியாத ஒரு செயல்

புனிதமிகு தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கு காலம் நேரம் இடம் ஆகிய மூன்று விடயங்கள் சம்மந்தப்பட்டிருத்தல் வேண்டும் என்பதனை நாம் ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மாணிப்பது எனும் தலைப்பில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களின் ஊடாக வாசகர்களுக்கு விளங்கப்படுத்தி இருந்தோம். அதில் எமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

என்றாலும் நாம் சிறுச் சிறுக் குழுக்களாகவும் இயக்கங்களாகவும் பிரிந்து வேறு வேறு தினங்களில் பெருநாள் அனுஷ்டிப்பதென்பது அனுமதிக்க முடியாத ஒரு செயலாகும் என்றே கருதுகின்றோம். ஏனெனில் இத்தகைய செயலானது எமது அறிவு ஐக்கியம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றின் பலவீனத்தினையே உலகுக்கு அறிவிப்பததாக உள்ளது.

அவ்வாறே உலக முஸ்லிம்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தலைமை எதுவும் கிடையாது என்பதனையும் அது உலகுக்கு உணர்த்துகின்றது.
எனவே இதன்பிறகாவது பிறைவிடயத்தில் ஒரு சிறந்த ஒன்றுபட்ட முடிவுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன் வருவார்களா?

முனாப் நுபார்தீன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :