எதிர்வரும் 6ஆம் திகதியை பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர தொலைநகலில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
இஸ்லாமிய மாதங்கள் பிறையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. இதற்கேற்ப இவ்வாருடத்திற்கான ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 5ஆம் திகதியென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், பிறையின் அடிப்படையில் எதிர்வரும் 6ஆம் திகதியே ஹஜ்ஜுப் பெருநாள் இலங்கையில் கொண்டாடப்படுமென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உட்பட பிறையைத் தீர்மானிக்கும் குழு தீர்மானித்து
அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் திங்கள்கிழமை 6ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்
அத்துடன், ஹஜ்ஜுப் பெருநாளுக்கான அரச, வங்கி விடுமுறை தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5ஆம் திகதி என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், உலமா சபையின் தீர்மானத்திற்கமைய எதிர்வரும் 6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் இலங்கையில்; கொண்டாடப்படவுள்ளதால் இத்தினத்தை அரச வங்கி விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களது பெருநாளைச் சிறப்பாகக் கொண்டாட உதவுமாறு கோருவதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர தொலை நகலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment