மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி கிராமத்திலிருந்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக யுவதியின் தாய் வாகரைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யுவதியின் தாய் புதன்கிழமை தெரிவித்தார்.
கந்தசாமி நிரோஜினி (வயது 20) என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக தங்களிடம் முறையிடப்பட்டுள்ளது என்று வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 22 ஆம் திகதி, அடகு வைத்துள்ள மோதிரம் ஒன்றை அடகு மீட்பதற்காக வாகரை மக்கள் வங்கிக்குச் சென்ற தனது மகள் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தாய் கந்தசாமி தங்கநாயகம் தெரிவித்தார்.
வாகரைப் பொலிஸ் உட்பட தாங்கள் இதுபற்றிப் பல இடங்களுக்கும் அறிவித்தும் இதுவரை தனது மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தாய் தங்கநாயகம் தெரிவித்தார்.
தனது மகள் காணாமல்போன பின்னர் ஆறு அலைபேசி இலக்கங்களில் இருந்து நபர்கள் தொடர்பு கொண்டு தெளிவற்ற முறையில் பேசுவதாகவும், காணமல் போன யுவதின் தாய் கூறினார். அதிலொரு நபர் தான் யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து பேசுவதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று யுவதியின் தாய் மேலும் கூறினார்.
இந்த முறைப்பாடு சம்பந்தமாக தாங்கள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன பிள்ளையின் தாயான கந்தசாமி தங்கநாயகத்தின் தொலைபேசி இலக்கமான 0777273684 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காணாமல் போன பிள்ளையின் தாய் பொது மக்களிடம் கேட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment