த.நவோஜ்-
வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரீட்சைகள் முடிவில் மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் 52 வருடங்களுக்குப் பின் சித்தி பெற்ற மாணவனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் புதன்கிழமை சிறுவர் தினத்தை முன்னிட்டு அப்பாடசாலைக்கு சென்று அதிபர், ஆசிரியர்கள், மாணவனையும் பாராட்டியதுடன், உதவிகளையும் வழங்கினார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் 162 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவன் பு.மிருசனனுக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தார்.
இப்பாடசாலையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பு.மிருசனன் 162 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய வி.ஸ்ரீவாலராஜ் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏனைய மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் சிறுவர் தினத்தினை முன்னிட்டு இனிப்பு மிட்டாய் என்பவற்றையும் வழங்கி வைத்தார்.
இங்கு சித்தி பெற்ற மாணவனின் பெற்றோர்களும் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். அத்தோடு இம்மாணவனுக்கான துவிச்சக்கர வண்டி பாராளுமன்ற உறுப்பினர் தமது சம்பள நிதியில் இருந்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது அதிபர் வணக்கத்துக்குரிய வி.ஸ்ரீவாலராஜ், கற்;பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணம், ஓய்வுபெற்ற மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆலோசகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment