அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர் தர பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு -படங்கள்






சலீம் றமீஸ்-

ன்று உலக சிறுவர் தினம் நாட்டில் எல்லாப்பாகங்களிலும் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி பாடசாலைகள், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.

இதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர் தர பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அப்துல் சலாம் அவர்களின் வழிகாட்டலில் பிரதி அதிபர்களான எம்.எச்.எம்.றஸ்மி மற்றும் ஐ.எம்.பாஹிம் ஆகியோர்களின் தலைமையில் சுமார் 400க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்ட மாபெறும் ஊர்வலம் பாடசாலை நுழைவாயிலில் இருந்து அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அல் ஜென்னா வித்தியாலயம் வீதி ஊடாக அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி புளு இளவன் விளையாட்டுக் கழக முன்றலை வந்தடைந்தது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான வசனங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு மாணவிகள் கோஷமிட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெண்களுக்கென இயங்கிவரும் இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் குலாம், ஊழியர்களின் பங்களிப்புடன் இப்பாடசாலை பௌதீக அபிவிருத்தி மட்டுமல்ல கல்வித் தரத்திலும் உயர்வை கண்டு வருகின்றது.

இவ்வருடம் மிக சிறப்பாக இந்த சிறுவர் தினம் வழங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை காணக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான சிறுவர் தினங்களை கொண்டாடுவதன் மூலமும், சிறுவர்களுக்குரிய நல்லுறவுகள் ஏற்படுவதுடன், பெற்றோர்கள் மத்தியில் சிறுவர்கள் தொடர்பான விழிப்புணர்வுகளும் ஏற்படுகின்றது என பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் சலாம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்களான ஐ.எம்.நஸீர் மௌலவி, எம்.சாஹிர் , ஏ.ஆர்.எம்.றிம்ஸான், கே.எஸ்.ஹாபிதா, எம்.எல்.றிஸ்னா, கே.சிஹாரா, ஏ.சி.பாயிஸா, எஸ்.சும்ரா, எம்.சர்மினா, எஸ்.எம்.தாஜூடீன், எஸ்.நிஷாந்தினி,ஏ.கோகிலா போன்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :