ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் குடிபோதையில் பொது இடங்களில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தினால் 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸாரால் இவர்கள் இன்று (03) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் முன்னிலையில் இன்று (03) வெள்ளிக்கிழமை ஆஜர் செய்தபோது இரு நபர்களும் 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடபடுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment