O/L பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை கல்வி வலயத்தில் உள்ள நான்கு மாணவர்கள் மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதல் நான்கு நிலைகளைப் பெற்றுள்ளனர். 

இதன்படி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியைச் சேர்ந்த அமீர் முஹம்மட் சஸ்னி அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் , கலீல் முஹம்மட் அகீல் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த பத்ம கைலநாதன் கிளரியன் டிலுஜன் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் , நான்காம் இடத்தை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாரூக் இஸ்ஸத் சஹானா ஆகியோர் பெற்றுள்ளனர் .

கல்முனை கல்வி வலயத்துக்கு பெருமை தேடிக் கொடுத்த இம்மாணவர்களுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இதற்காக உழைத்த பாட சாலை ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :