தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கௌரவ.ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள முறாவோடை தொடக்கம் பெரிய களப்பு வரையிலான வடிகான் அமைக்கும் நிர்மாணப்பணிகளை அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் ஏ. அகமட் சகி அவர்கள் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வானது அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்களினதும், பத்ர் பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்களினதும், ஹல்லாஜ் மன்ற நிருவாக உறுப்பினர்களினதும், பத்ர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களினதும், முக்கிய அரசியற் பிரமுகர்களினதும் இன்னும் பல பொது மக்களின் பங்குபற்றுதலுடனும் நடைபெற்றது.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment