சலீம் றமீஸ்-
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச இறத்தல் குளம் ஊடாக 1240 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் அப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி இறத்தல் குளம் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இக் குளத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்டமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் அங்கு நேரடியாக சென்று இறத்தல் குளத்தினையும், இப்பிரதேசத்தினையும் பார்வையிட்டார்.
இந்த குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
இறத்தல் குளத்தினை நேரடியாக பார்வையிடுவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை நீர்ப்பாசன பணிப்பாளர் கே.டி.நிஹால் சிறிவர்த்தன, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான், உட்பட நிர்வாக பொறியியலாளர்கள் ,விவசாய பிரதி நிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment