இந்த போட்டி வாணவர்களுக்கும் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையில் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வால் அவனின் மத்தியஸ்த்தத்துடனயேயே அரங்கேறியது.
போட்டி தற்பொழுது ஆரம்பமாகின்றது வினாப்பத்திரம் முதலாவதாக வானவர்களுக்கே சமர்ப்பிக்கப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்"" என்றான்.
அதன் போது அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து கொண்டு தங்களது இயலாமையை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவர்கள் ''(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்"" எனக் கூறினார்கள்.
அதன் பிறகு வினா நபி ஆதம் (அலை) அவர்களுக்கு விடப்படுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான் : ''ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!"" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது ''நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும்ää நீங்கள் வெளிப்படுத்துவதையும்ää நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?"" என்று (இறைவன்) கூறினான்.
உலகில் முதல் முதலில் அல்லாஹ்வின் கட்டளையை மீறியவன்
நபி ஆதம் (அலை) அவர்கள் மேற்படி போட்டியில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து வானவர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்குப் பணி (ந்து ஸ{ஜூது செய்) யுங்கள்"" என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸ{) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல்-குர்ஆன்: 2: 31-34)
இதன் போது வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய மேற்படிக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிந்தார்கள். என்றாலும் வானவர்களுடன் சேர்ந்திருந்த ஜின் இனத்தைச் சார்ந்த இப்லீஸ் என்பவன் மாத்திரம் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கனித்துச் சிரம் பணிய மறுத்து விட்டான். இதுவே உலகில் முதல் முதலாவதாக மீறப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும்.
எப்பொழுது இந்த இப்லீஸ் என்பவன் அல்லாஹ்வுடைய கட்டளையைப் புறக்கணித்தானோ அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இந்தப் போராட்டம் ஆரம்பித்து விடுகின்றது. இந்தப்போராட்டம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறுதி நாள் வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் தண்மையும் அதற்கான உத்தரவாதமும் கொண்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!"" என்று இப்லீஸ் கூறினான்.
''நிச்சயமாகää நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;"" ''குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்"" என்று அல்லாஹ் கூறினான்.
(அதற்கு இப்லீஸ்ää) ''என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்ää நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
''அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர"" என்று கூறினான்.
(அதற்கு இறைவன் ''அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழிää என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர"" என்று கூறினான். நிச்சயமாக (உம்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும் (அல்- குர்ஆன்: 15 : 36-37)
இதுவே உலகில் முதல் முதலாக அல்லாஹ்வின் கட்டளை ஒன்று மீறப்பட்ட இடமாகும் அப்போது வல்ல அல்லாஹ் இப்லீசை நோக்கி தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்க்கான நியாயம் பற்றி வினவுகின்றான்
அல்லாஹ் கூறுகின்றான் : ''நான் உனக்குக் கட்டளையிட்ட போதுää நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?"" என்று அல்லாஹ் கேட்டான்.
அதற்க்கு இப்லீஸ் பின்வருமாறு பதில் கூறினான்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய்ää அவரை களிமண்ணால் படைத்தாய்"" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்- குர்ஆன்: 7 : 12
உலகில் முதல் முதலில் அல்லாஹ்வின் தடையை மீறியவர்கள்;
இவ்வாறு இப்லீஸ் தனது தவறை இறுதி வரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான் ஆதலால்தான் அவன் அல்லாஹ்வின் சாபத்திற்க்கு ஆளாக்கப்பட்டு அல்லாஹ்லின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டும் வீகின்றான். ஆதலால் நபி ஆதம் (அலை) அவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களை வழிகெடுத்தும் விடுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : மேலும் நாம்ää ''ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்"" என்று சொன்னோம்.
இதன்பின் ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம் ''நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு"" என்று கூறினோம். (அல்- குர்ஆன்: 2 : 35-36) இதுவே உலகில் முதல் முதலாவதாக மீறப்பட்ட அல்லாஹ்வின் தடையாகும்.
இவ்வாறு சைத்தானால் வழி கெடுக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் உடனடியாக தங்களது தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்கின்றார்கள் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருகின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும்ää அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும்ää கருணையாளனும் ஆவான். (அல்- குர்ஆன்: 2 : 37)
இந்த இடத்தில் நாம் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதாவது உலகில் முதல் முதலில் இருவர் இரண்டு விடயங்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விடுகின்றார்கள்.
அதில் முதலாவதாக அல்லாஹ்வின் ஆதத்திற்கு சஜ்தா செய்யுங்கள் எனும் ஏவலைப் புறக்கனித்தவன் சைத்தான் ஆதலால் அவன் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டு அவனது அருளிலிருந்தும் விரட்டப்பட்டு விடுகின்றான்
அதே நேரம் உலகில் முதல் முதலில் சுவர்க்கத்தில் குறித்த ஒரு மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் எனும் அல்லாஹ்வின் தடையை மீறியவர்கள் நபி ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய இருவருமாவார்கள் என்றாலும் அவர்கள் அல்லாஹ்வால் சபிக்கப்படவுமில்லை அவனது அருளிலிருந்து தூரமாக்கப்படவுமில்லை.
சைத்தான் சபிக்கப்பட்டதற்கான காரணம் யாதெனில் அல்லாஹ் அவனது நிலைப்பாடு தவறானது என்று அறிவுறுத்தியும் அவன் கடைசி வரை தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். தனது கருத்தினிலேயே பிடிவாதமாக இருந்து விடுகின்றான்.
இப்படியான கொள்கையுடைய எத்தனையோ மனிதர்கள் இன்றும் எமக்கு மத்தியில் இருந்து கொண்டிருப்பதனைப் பார்க்கின்றோம். அவர்களின் கூற்று தவறானது என்று அவர்களின் மனசாட்ச்சி அவர்களுக்கு உறுத்தும் என்றாலும் அவர்கள் எவ்வாறு சைத்தான் தனது மனோ இச்சைக்கு வழிப்பட்டானோ அவ்வாறே இவர்களும் தங்களது மனோ இச்சைக்கு வழிப்படுவதன் காரணமாக அவர்களால் இறங்கி வர இயலாது. உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத அவர்களின் இந்த நிலை சைத்தானுடைய வழிகெடுத்தலாகும்.
அதே நேரம் நபி ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய இருவரும்; தமது தவறை உணர்கின்றார்கள் கவலைப் படுகின்றார்கள் அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்புக் கேட்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: அதற்கு அவர்கள்; ''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்ää நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"" என்று கூறினார்கள். (அல்- குர்ஆன்: 2 : 37)
இப்படியாக அவர்கள் இருவரும் தங்கள் தவறை ஏற்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதன் காரணமாக அல்லாஹ் அவர்களிருவருக்கும் மன்னிப்பு வழங்குகின்றான்.
அவ்வாறே சைத்தான் தனது தவறை ஏற்க்க மறுத்ததன் காரணமாக அவன் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான் என்பதனை மேற்படி வசனங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்

0 comments :
Post a Comment