சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

எம்.எம்.ஏ.ஸமட்-

ம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று  (17.9.2014) புதன் கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளரைச் ஆசிரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அனஸ்
இச்சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாண சம்மாந்துறைக் கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை 06/ 2006 (IV), 2008/45, 28/2010, 2011/30. 03/2014 முதலான சுற்று நிருபங்களுக்கமைய வழங்கு வதிலுள்ள இடர்பாடுகள், 2007/20ஆம் இலக்க சுற்று நிருப தேசிய ஆசிரியர் இட மாற்றக் கொள்கைக்கு முரணான இடமாற்றங்கள் என்பன பற்றி இச்சந்திப்பில் பேசப் படவுள்ளது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தேசியத் தலைவர் வி.ரி.சகாதேவாரஜா, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தேசியத் தலைவர் எம்.அனஸ் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங் கத்தின் சம்மாந்துறைக் கிளைத் தலைவர், செயலாளர், பொருளாளர் முதலானோர் பங்கேட்கவுள்ளனர்.

இச்சந்திப்புக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் வி.ரி. சகாதேவாரஜா முன்னெடுத்து வருகின்றார். பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாத விடயங்களை, ஒருவார விசேட நடமாடும் சேவையொன்றின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஒன்றும் உள்;ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :