த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேரும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மீராவோடை பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய போது பொதுமக்களாள் திருடன் ஒருவர் பிடிபட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்த போது பொலிஸ் விசாரனைகளின் போது குறித்த நபரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையிலும்; மற்றுமொரு மோட்டார் சைக்கிள் பாகங்களாக உடைப்பதற்கு முன்பாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
.jpg)
0 comments :
Post a Comment