இம்முறை நடை பெற்ற புலமைப்பரீட்சையில் பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்குள் அதி கூடிய 17 மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகவும் பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்குள் அதி கூடிய 190 புள்ளிகளைப் பெற்ற மாணவனையும் கொண்ட பாடசாலையாகவும் பொத்துவில் அல்- கலாம் முஸ்லிம் வித்தியாலயம் காணப்படுகின்றது.
மாணவர்கள் பெற்ற புள்ளிகள் முறையே
- எம்.எஸ். சஹீகுல் சமான் - 190 Distric rank-2
- ஏ.பாத்திமா அக்சானா -183
- எம்.எச்.பாத்திமா அபாவுன் ஜெஸ்த்-181
- எம்.ஆர்.எப். முகம்மத் நுஸ்கி – 176
- எம். முகம்மத் ஹாஜி -173
- எப். முகம்மத் சஜாத் -171
- ஏ.சி. அமான் இசான் - 170
- ஏ.எஸ். அப்துல் அத்னான் - 167
- ஆர். முகம்மத் முப்தி – 165
- ஜே. அத்திப் அகமட் -165
- ஆர்.முகம்மட் றிப்காஸ்-165
- ஆர். முகம்மது அத்னான் - 165
- ஏம்.ஆர். ஆக்கிப் அர்ஹம் -163
- என். முகம்மட் சமீஹ் -163
- ஏ.கே. சபாஉல் ஹூஸ்னா -162
- ஏ.ஆர். பாத்திமா சிரின் றிசாபா -162
- எம்.எம். இபாமுல் இலாஹி -161
இவ் வெற்றித்திறமைக்கு பக்க பலமாக நின்று கற்பித்த ஆசிரியர்களான எம்.கே. அஸ்வத் ஜெயின் எம்.எம்.சரப் முகைடீன் அவர்களையும் இவ்வித்தியாலயத்தை வெற்றியிலக்கோடு நகர்த்திச் செல்கின்ற அதிபர் ஆ.ஐ.ஆ சமீம் அவர்களையும் பாக்கியவத்தை அல் கலாம் முஸ்லிம் வித்தியாலய கல்விச் சமூகம் பெற்றோர்கள் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.
ஏற்கனவே பொத்துவில் அல்- கலாம் முஸ்லிம் வித்தியாலயம் பல அதிபர் இடமாற்றங்களையும் குழப்ப நிலைமையினையினையும் சந்தித்து வந்த நிலைமையில் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிபர் ஆ.ஐ.ஆ சமீம் அவர்கள் பாடசாலையினை பொறுப்பெடுத்ததன் பின்னர் பாக்கியவத்தை அல் கலாம் முஸ்லிம் வித்தியாலயம் பொத்துவில் பாடசாலைகளுக்குள் முன்மாதிரிப் பாடசாலையாக இயங்குவது குறித்துக்காட்டப்பட வேண்டியவையே.
இம்போட்மிரர் இணைய வலையமைப்பும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது...

0 comments :
Post a Comment