ஜே.வி.பியுடன் இணைந்து செயற்படத் தயார் - சரத் பொன்சேகா

ரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஜனநயாகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஜே.வி.பி அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒரே இலக்கினை நோக்கியே பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சியை அமைக்க பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனித்தனியான தளங்களில் போட்டியிட்ட போதிலும், பிரதான இலக்கு ராஜபக்ஸ அரசாங்கத்தை விரட்டியடிப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழும்பில் சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது சேதமடைந்த வாகனம், தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் என்பன தேர்தல் பிரச்சார மேடைக்கு அருகாமையில் காட்சிப் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :