.jpg)
இதேவேளை, ஹாலி எல தேர்தல் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
'ஊவா மாகாணசபை தேர்தலின்போது வன்முறைகளில் ஈடுபட்ட பலரை அடையாளம் கண்டுள்ளோம். வன்முறைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் மூன்று மற்றும் பல வாகனங்களையும் அடையாளம் கண்டுள்ளோம். இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'தேர்தல் வன்முறை சம்பவங்களின் போது ஐந்து வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சொந்தமான வாகனமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு செல்லும் வழியில் இவ்வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஹாலி எல பிரதேசசபைக்கு முன்பாக இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்பும் தேர்தலின்போதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தொடர்பிருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விசேடமாக, பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்களே இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஊவா மாகாணசபை தேர்தலில் 22 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஹல்டுமுல்ல, ஹெதிலிவௌ மற்றம் பதுளை ஆகிய பிரதேசங்களிலே பிரதான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எத்தகைய உயர் பதவிகளை வகித்திருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
தவி
0 comments :
Post a Comment