பேஸ்புக் ஓனர் மார்க்க்கின் புதிய வீடு சீரமைப்பு: கொந்தளிக்கும் அக்கம்பக்கத்தினர்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவது அக்கம்பக்கத்தினருக்கு பெரும் பிரச்சனையாகி உள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கும், அவரது மனைவி பிரிஸில்லா சானும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வீட்டை 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கினர். 1920களில் கட்டப்பட்ட அந்த 4 அடுக்குமாடி வீட்டை அவர்கள் சீரமைக்கின்றனர். 

மிஷன் மாவட்டம் டோலர்ஸ் பார்க் அருகே உள்ள அந்த வீட்டை சீரமைப்பதால் அக்கம் பக்கத்தினர் எரிச்சல் அடைந்துள்ளனர். அந்த வீட்டில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பதிக்கும் பணியால் நடைபாதையில் குழிதோண்டியுள்ளனர். 

இதனால் அக்கம்பக்கத்தினர் வாகனங்களை செலுத்த, நிறுத்த சிரமப்படுகின்றனர். ஜக்கர்பர்கின் வீட்டில் மீடியா அறை, ஒயின் அறை, பார், கார் பார்க்கிகங், பேஸ்மென்ட் கராஜ் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இந்த வேலைகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 

இந்த பணிகளால் ஜக்கர்பர்க் வீட்டில் இருந்து வரும் சப்தத்தால் அக்கம்பக்கத்தினர் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :