இலங்கை சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மக்கள் வாக்களிப்பார்கள்-BBS

லங்கை சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் மக்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்­வா­றான வேட்­பாளர் தமி­ழ­ராக, சிங்­க­ள­வ­ராக, முஸ்­லி­மாக இருந்­தாலும் பிரச்­சி­னை­யில்­லை­யென பொது­ப­ல­ சே­னாவின் தேசிய அமைப்­பாளர் விதாரன் தெனியே நந்­த­தேரர் தெரி­வித்தார்.

சட்ட விரோத வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்க கூடாது என்றும் தேரர் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே விதா­ரன்­தெ­னியே நந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தேரர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

உலகில் எங்கும் இல்­லாத தேர்தல் கலா­சாரம் இங்கு காணப்­ப­டு­கின்­றது. ஒரு­வ­ருக்­கொ­ருவர் சேறு­பூ­சிக்­கொள்­வதும் வன்­மு­றை­களும் கொலை­களும் என கீழ்த்­த­ர­மான தேர்தல் கலா­சா­ரமே காணப்­ப­டு­கின்­றது.

எந்­த­வொரு தொழி­லுக்கு இணைய வேண்­டு­மானால் அதற்கு கல்­வித்­த­கைமை உட்­பட வேறு தகு­திகள், குடும்ப பின்­னணி தேவை. ஆனால், இங்கு அர­சியல் செய்­வ­தற்கு எந்­த­வி­த­மான கல்வி அறிவோ, தகு­தியோ, குடும்ப பின்­ன­ணியோ தேவை இல்லை. கசிப்பு வியா­பாரம் அல்­லது போதைப்­பொருள் வியா­பாரம் என எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோத வர்த்­தகம் செய்­ப­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­களால் இங்கு அர­சியல் செய்ய முடியும். தேர்­தலில் போட்­டி­யிட முடியும்.

இந்­நிலை மாற வேண்டும். அதனை மக்­க­ளா­லேயே மாற்ற முடியும். எனவே, ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும். இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சொந்­த­மான நாடு என்றும் எமது கலா­சாரம் வர­லாறு தெரிந்­த­வர்கள் எவ­ராக இருந்­தாலும் அவ்­வா­றான வேட்பாளர்கள் தமிழராக, சிங்களவர்களாக, முஸ்லிம் ஆக இருக்கலாம். இந்த நிலைப்பாடு கொண்ட வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :