கல்முனை அஷ்ஹர் வித்தியாலயத்தில் புதிய 2 மாடி வகுப்பறைக்கட்டடம்: பார்வையிட்ட ஆரிப் சம்சுடீன்

எம்.எம்.ஏ.ஸமட்-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் சிபாரிஸின்  பெயரில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் ஆரம்பப் பாடசாலையான கல்முனைக்குடி  ஜும்ஆ பள்ளிவீதியிலுள்ள கமு/அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தில் புதிய இரு மாடி  வகுப்பறைக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பறைக் கட்டடத்தின் தேவை குறித்து பாடசாலை சமூகம் விடுத்த கோரிக்கையினையடுத்து  மாகாண சபை உறுப்பினர் மேற்கெண்ட முயற்சியின் பயனாக, 65 இலட்சம் ரூபா  நிதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை நேரில்  சென்று பார்விட்ட மாகாண சபை உறுப்பினர், கட்டட நிர்மாணப் பொறியிலாளர்  அருண் மற்றும் பாடசாலை அதிபர் அப்துல் றாஸாக் ஆகியோரிடம் முன்கொண்டு  செல்லப்படும் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். 

இக்கட்டட நிர்மாணப்பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாத்தில் பூர்த்தி செய்து  திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.  வகுப்பறைக்கட்டடத் தேவைப்பாடுள்ள இப்பாடசாலைக்கு பல வருடங்களின் பின்னர்  புதிய கட்டடமொன்று மாகாண சபை உறுப்பினரின் சிபாரிசின் பெயரில்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :