எஸ்.அஷ்ரப்கான்-
சாய்தமருது “ டஸ்கேர்ஸ் ” விளையாட்டு கழகம் தனது 2 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதிய சீருடை அறிமுக விழா நேற்று (12) வெள்ளிக்கிழமை மாலை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் கழகத் தலைவர் எம். அமான் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை முதல்வரும், தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியால் “ டஸ்கேர்ஸ் ” விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன் சிராஸ் மீராசாஹிபினால் கிரிக்கெட் கடினபந்து விளையாட்டு உபகரணங்களும் கழகத் தலைவர் அமானிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக அலகு-04 சென்றல் கேம்ப் அல்-ஹிறா வித்தியாலய அதிபர் ஏ.எல்.சனுாஸ், சாய்ந்தமருது சிங்கர் ஷோ றுாம் தவிசாளர் எஸ்.எச். ஜிப்ரி ஆகியோரும், விசேட அதிதிகளாக சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகரும், கழகத்தின் ஆலோசகருமான ஆதம்பாவா ஜெலீல், சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். ரஜாய், றிஸ்வி மோட்டர்ஸ் உரிமையாளரும், கழகத்தின் முகாமையாளருமான யு.எல்.றிஸ்வி உட்பட கழகத்தின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு கழக செயலாளர் ஆசிரியர் எஸ்.முபாறக் நன்றியுரை நிகழ்த்தினார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment