SLMC ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யென கூறு­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது -சம்­பிக ரண­வக்­க

ந்த நாட்டில் அர­சாங்­கத்­தினை தீர்­மா­னிப்­பது பெரும்­பான்மை சிங்­கள மக்­களே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆட்­சியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யென கூறு­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனத் தெரி­விக்கும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­த­லுக்கு முஸ்­லிம்­களே காரணம். இதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் பொறுப்­பேற்­காது எனவும் குறிப்­பிட்டார்.

அளுத்­கம தாக்­குதல் சம்­பவம் அர­சாங்­கத்­தினால் திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்­ட­தொன்று. அர­சாங்கம் தவறை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக ரண­வக்­க­விடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்த நாட்டின் சிங்­கள மக்­களே எப்­போதும் ஆட்­சியை தீர்­மா­னித்து வரு­கின்­றனர். அர­சாங்கம் என்­பதையும் ஜனா­தி­பதி யார் என்­ப­தையும் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக எப்­போ­துமே சிங்­கள மக்­களே உள்­ளனர். இந்­நி­லையில் முஸ்­லிம்­களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸோ ஆட்­சியை தீர்­மா­னிக்­கின்­றனர் எனக்­கூ­று­வது வேடிக்­கை­யாக உள்­ளது.

நிரந்­த­ர­மற்ற கொள்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமது தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவும் சுய­ந­லத்­திற்­கா­கவும் அர­சியல் செய்­கின்­றமை அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம். இன்று முஸ்­லிம்கள் இதை உணரா விட்டால் எதிர்­கா­லத்­திலும் முஸ்லிம் சமூகம் தவ­றா­ன­தொரு கொள்­கை­யி­லேயே வழி­ந­டத்­தப்­ப­டு­வார்கள். ஆட்சி மாற்­றத்­திற்கு ஏற்ப அர­சாங்­கத்தில் ஆச­னங்­களை கைப்­பற்­று­வது மட்­டுமே இவர்­களின் ஒரு கொள்­கை­யாக உள்­ளது. இது இந்த அர­சாங்­கத்தை மட்­டு­மல்ல எந்­த­வொரு அர­சாங்­கத்­தி­னையும் பாதிக்­காது.

வடக்கில் எவ்­வாறு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிரி­வி­னை­யினை தூண்டி தமிழ் மக்­களை ஏமாற்­று­கின்­ற­னரோ அதேபோல் கிழக்கு முஸ்­லிம்­களை ஏமாற்றி தீவி­ர­வாதக் கொள்­கை­களை முஸ்லிம் சமூ­கத்­தி­டையே பரப்பும் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய்து வரு­கின்­றது. அதேபோல் அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு அர­சாங்­கத்தை வீழ்த்தும் முயற்­சி­யி­னையே முஸ்லிம் காங்­கிரஸ் மேற்­கொள்­கின்­றது. சர்­வ­தே­சத்­திடம் பொய்­யான அறிக்­கை­களை சமர்ப்­பித்து சர்­வ­தேசத்தின் பணத்­திலும் அர­சாங்­கத்தின் பணத்­திலும் சுக­போக வாழ்க்­கை வாழ்ந்து வரு­கின்­றனர்.

கத­வுகள் திறந்தே உள்­ளது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்தை எச்­ச­ரிப்­ப­தாலோ அல்­லது தமது சவால்­களால் அர­சாங்­கத்­தினை தம்­வசம் இழுக்­கலாம் என்றோ நினைப்­பது முட்டாள் தன­மான செயற்­பாடு. இந்த ஆட்­சியில் திருப்தி இல்­லா­விடில் அர­சாங்கம் செய்­வது தவ­றெனில் முஸ்லிம் காங்­கிரஸ் அரசை விட்டு வெளி­யே­றலாம். அவர்­களை யாரும் தடுத்து வைக்­க­வில்லை. அவர்கள் வரு­வ­தற்கு எவ்­வித தடை­களும் இல்­லாது கத­வுகள் திறந்­தி­ருந்­ததைப் போல் போவ­தற்கும் கத­வுகள் திறந்தே இருக்­கின்­றது. தாரா­ள­மாக வெளி­யேற முடியும்.

அளுத்­கம சம்­ப­வத்­திற்கு அரசு கார­ண­மில்லை அதேபோல் அளுத்­கம சம்­பவம் முஸ்­லிம்­க­ளினால் திட்­ட­மிட்டு நடாத்­தப்­பட்­ட­தொன்­றாகும். இதில் சிங்­கள மக்கள் மீதோ அர­சாங்­கத்தின் மீதோ பழி சுமத்த முயற்­சிப்­பதை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அமைச்சர் ஹக்கீம் அளுத்­கம சம்­பவம் தொடர்பில் சாட்­சி­யங்­களை வைத்­துள்­ளா­ரெனின் அவற்றை நிரூ­பித்­துக்­காட்ட வேண்டும். அதை விடுத்து வார்த்­தையில் கூறு­வது ஒரு போதும் உண்­மை­யா­காது. எனினும் அளுத்­கம சம்­பவம் தொடர்பில் சரி­யான உண்­மை­யான ஆதா­ரங்கள் எம்­மிடம் உள்­ளது. இவை தற்­போது இணையத் தளங்­க­ளிலும் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது.

எம்­மிடம் பல ஆதாரங்கள் இருந்தும் இந்த பிரச்சினையினை தடுக்க வேண்டும் என்றே நினைக்கின்றோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே செயற்படுகின்றனர். முஸ்லிம்கள் மீது தவறிருக்கையில் அரசாங்கம் தவறினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவதை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :