ஒமர் பள்ளிவாசல் தாக்குதலை கண்டிக்கின்றார் - அஸ்வர் எம்.பி

ஸ்ரேல் படையினர் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலினால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒமர் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

இந்த படுபாதகமான தாக்குதலை முழு நாகரீக உலகமும் வன்மையாக எதிர்த்து வல்லரசு நாடுகளும் ஐ.நா. சபையும் மற்றும் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இன்றேல் சமாதான உலகை உருவாக்குவோமென ஐ.நா. சபையும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் விடுத்துள்ள பிரகடனத்துக்கு எந்தவிதமான அர்த்தமும் மதிப்பும் இல்லாமலாகி விடும்.

இஸ்ரேல் படை அப்பாவி பலஸ்தீனர்களை குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் பச்சை பச்சையாக கொலை செய்வதைக் கண்டிக்கிறோம். இஸ்ரேல் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த இஸ்ரேல் ஸியோனிச வெறியாளர்களின் மனிதப்படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஓங்காரமான ஒலி உலகமெங்குமிருந்து எழுப்பப்பட வேண்டும். 

ஷஹீதான பாலஸ்தீனர்களுக்காக வேண்டி நம் நாட்டிலும் சகலரும் துஆ இறைஞ்ச வேண்டும் அதேவேளை மறைவான ஜனாஸா தொழுகையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :