லெபனான் நாட்டின் எல்லையோரமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ எஸ் ஐ எஸ் இஸ்லாமிய போராளிகள், கடந்த சில நாட்களாக லெபனான் ராணுவத்தினர் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அர்சல் என்ற நகரின் மீது நடத்திய அதிரடி தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். 85 வீரர்கள் படுகாயமடைந்தனர். 22 வீரர்கள் மற்றும் 20 போலீசாரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இவர்களின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க தங்களிடன் போதிய அளவிலான நவீன போராயுதங்கள் இல்லை என்று லெபனான் ராணுவம் கூறி வரும் நிலையில், இவர்களை ஒடுக்க தேவையான ஆயுதங்களை உடனடியாக வழங்க தயார் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ எஸ் ஐ எஸ் இனை எதிர்த்து போரிடும் லெபனான் ராணுவத்தை பலப்படுத்த 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இன்று அறிவித்துள்ளார்.
சவூதி அரேபிய அரசு ஏற்கனவே, லெபனானுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment