கொக்கட்டிச்சோலை விவகாரம்:அமெரிக்க தூதரக அதிகாரியினர் யோகேஸ்வரனிடம் வினாவியுள்ளனர்

த.நவோஜ்-

ட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் என்னும் கிராமத்தில் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையிலான மோதல் தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரியினர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் வினாவியுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு பனையறுப்பான் கிராமத்துக்குச் சென்ற ஏழு பொலிஸார் கசிப்பு வடித்து விற்பது சார்பாக ஒரு குடும்பத்தை விசாரித்ததாகவும், பின் அக்குடும்ப தலைவியை கொண்டு செல்ல முற்பட்ட வேளை ஏற்பட்ட வாய்த்தக்கம் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அது அடித்தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னனியில பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த நிலையில் இரு பெண்கள் காயமடைந்து தற்போது இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு மூன்று பொலிஸார் காயமடைந்ததாகவும், பொலிஸ் வண்டி எரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது புதன்கிழமை மீண்டும் அக்கிராமத்திற்கு சென்ற பொலிஸார் பத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை கைது செய்து கொண்டு செல்வதாகவும் வெளியான செய்தியையடுத்து இவ்விசாரிப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் நடைபெற்றுள்ளது.

இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண்களை பார்வையிட்டதுடன், நடைபெற்ற சம்பவம் சார்பாகவும் விசாரித்து அறிந்து கொண்டார்.

இவ்வேளை துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தாயின் இரு பிள்ளைகள் (இளைஞர்கள்) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடனும் நடைபெற்ற சம்பவம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் விசாரித்துள்ளார்.

மேலும் பாதிப்புக்குள்ளான கிராம மக்களிடமும் தகவல்களை பெற்று பூரண விளக்கம் ஒன்றை அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வழங்கியுள்ளார் என அறியப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :