அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான 2014 ஆண்டிற்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நாளை 03ஆம் திகதி (ஞாயிறுக்கிழமை) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதில் மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் பஙகேற்கவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக குழுநிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர், கௌரவ அதிதியாகவும், அதிதிகளாக இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :
Post a Comment