இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து சர்ச்சையாகவும் அழுத்தம் கூடியதாகவும் உள்ளதுமான வடமாகாகண ஆளுநராக முஸ்லிம் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நியமனம் செய்ய அரசாங்கம் முற்ச்சி எடுத்து வருவதாக அறியமுடிகின்றது.
அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு தமிழ்த்தேசிக் கூட்மைப்பு மற்றும் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்கு அரசாங்கம் இத்தகைய முடிவுகளை எடுத்தள்ளது எனதெரிவிக்கப்படுகின்றது.
வடகிழக்கு மாகாணம் ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற சர்வதசப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி இத்தகைய நியமனம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி உள்ளார்.
இருந்த போதிலும் சட்டத்துறையில் அனுபவமும் அரசியல் செயற்பாடுகளோடு இணைந்து செயற்படக்கூடிய சிறுபான்மைச் சமுகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
அண்மைக்காலமாக SLMC மற்றும் TNA கட்சிகளிடையே நெருக்கமான உறவு வலுப்பெறும் நிலையில் தமக்கு சார்பான முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் TNA யின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.
குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் சட்டத்துறையில் ஆற்றல் உள்ளவராக இருப்பதாலும் சர்வதேச ரீதியில் தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களாலும் இவற்றைக் கையாளக்கூடிய ஒரு திறமைசாலியை நியமிக்குமறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய தற்போது லண்டனில் சொலிஸிட்டராக கடைமையாற்றும் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் ஆய்வும் மற்றும் ஆலோசனைகளை வழங்கிவரும் ஒரு நபரை ஆளுநராக நியமிக்குமாறு பலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்குறித்த நபரை ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மையில் தேசியிப்பட்டியல் மூலம் அரசியலுக்கு வருவதற்கான பேச்சுக்களை நடாத்தியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0 comments :
Post a Comment