த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையில் இருந்து பொலநறுவைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளும், சிறிய ரக டிப்பர் வாகனமும் ஒன்றும் ஓட்டமாவடி பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற வாழைச்சேனை ஹைராத் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஹிதாயாத்துல்லாஹ் (வயது 38) மற்றும் அதே வீதியைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது அப்துல் காதர் (வயது 47) ஆகியோரே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பாக சிறிய ரக டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment