த.நவோஜ்-
கைத்தொழில் அதிகார சபையால் சிறு கைத்தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்கள் தோறும் செயலமர்வு நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்தவகையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, ஏறாவூர் நகர், ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 85 சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு வாழைச்சேனை கிறஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.
கைத்தொழில் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.எம்.ரணவீர தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக தொழில் திணைக்கள அதிகாரிகளும், கைத்தொழில் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment