3வது முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்தவுக்கு சந்தர்ப்பம் இல்லை-சரத் என் சில்வா

லங்கையின் அரசியலமைப்பின் படி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் இல்லையென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவிக்கின்றார்.
அரசியலமைப்பின் 31 ஆவது சரத்தின் 2ஆவது பிரிவின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இரண்டாவது பதவிக் காலத்துக்கு 2010 நவம்பர் 19 ஆம் திகதி பதவியேற்றதால் அவர் மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவராகிறார் என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் மூலம் 31/2 உபஷரத்து நீக்கப்பட்டுள்ளது. இதன் படி இதன் பின்னர் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியொருவருக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு ரீதியில் தடையேதும் இல்லை. 

இருந்தும் இந்த ஷரத்தை நீங்கும் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகின்றார். எனவே சட்டத்தில் தெரிவித்துள்ளபடி அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :