ஹசன் மௌலவிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் உயரிய சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்- ஹரீஸ் (எம்.பி)

ஹாசிப் யாஸீன்-

முஸ்லிம் சமூக அரசியலில் தனக்கென ஒரு தனியான இடத்தை பெற்று, இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ்ந்த மார்க்க அறிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஹஸன் மௌலவியின் இழப்பு இலங்கை வாழ் மூவின மக்களுக்கும் பேரிழப்பாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் அவா் தெரிவித்துள்ளதாவது,

சமூக சேவையாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மா்ஹூம் எஸ்.எம்.எம். ஹஸன் மௌலவி அரசியல் ரீதியில் கட்சி பேதங்களை மறந்து சமூகத்திற்காக தான் வாழ்நாளில் பெரும் பகுதியைசெலவிட்டவர். இவர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இன நல்லுறவைப் பேணும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களுடன் செயற்பட்டார்.

சமூக சேவைப்பணியில் மிக உட்சாகமாக செயற்பட்ட இவர் ஹஸன் நற்பணி மன்றத்தினுாடாக ஏழைகளின் வாழ்வில் ஒளியூட்ட பெரும் பாடுபட்டார். மர்ஹூம் ஹஸன் மௌலவி அரபு நாடுகளுடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்திருந்ததுடன் அதனுாடாக ஏழை மக்களின்துயர்துடைக்க வாழ்வுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து செயற்பட்டார். 

இவரது சமூக சேவை தொடரில் அநாதை இல்லங்களை நிறுவி ஏழைப் பிள்ளைகளின் வாழ்வுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

காண்பவர்களுடன் அன்பாக பழகக்கூடிய இவர் அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாட்டு மக்களுக்காக பெரும் சேவையாற்றிய நிலையில் உயிர் நீத்தமை எமக்கு பெரும் வேதனையைத் தருகின்றது.

அன்னாரின் மறைவினால் துயருறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும், உறவினா்களுக்கும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காக முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :