எம்.ஜே.எம். முஜாஹித்-
பொத்துவில் பிரதேசத்தில் அனர்த்த ஆபத்தை குறைக்கும் முகமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முசரப் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உயிர் பாதுகாப்பு அங்கிகள், சமிஞ்சைகள், ஒலி எழுப்பும் கருவிகள், தொலைத் தொடர்பு உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக உதவிப்பணிப்பாளர் எ.எல். சியாத் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவ்வாறான உபகணரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர் காலத்தில் அனர்த்தம் ஏற்படும் போது ஆபத்தை குறைக்க முடியுமென உதவிப்பணிப்பாளர் கூறினார்.

0 comments :
Post a Comment