கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட வீடமைப்பு அதிகார சபை திறப்உ அழைப்பிதல்


சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை எதிர்வரும் 2014.09.01 ம் திகதி அன்று சம்ரதாயபூர்வமாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேய விக்ரம மற்றும் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் மற்றும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கௌரவ அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தரவிருக்கும் கௌரவ ஆளுனர்; மற்றும் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரினாலேயே பொது மக்கள் பயன்பெறும் வண்ணம் இவ்வதிகாரசபை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, கலாசார அமைச்சின் கௌரவ அமைச்சர் விமலவீர திஸாநாயக, சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் கௌரவ அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், விவாசாய, கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சின் கௌரவ அமைச்சர் ஸட். ஏ. ஹாபிஸ் நஸீர் அகமட், கௌரவ கிழக்கு மாகாண சபையின் தலைவி ஆரியவதி கலபதி மற்றும் கௌரவ பிரதி தலைவர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்கள், பிரதம செயலாளர், திரு. டீ.எம்.எஸ்.அபேகுணவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :