சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக மாணவர்விவகாரம்:இன­வா­தத்தை தூண்­டி­னாரா? விசா­ரிக்­கவே மாணவன் கைது

ப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக மாணவர் விடு­தியின் கழிப்­ப­றையில் கடந்த ஞாயி­றன்று (03 ஆம் திகதி )அதி­காலை அடை­யாளம் தெரி­யா­த­வர்­க­ளினால் தாக்­கப்­பட்டு, இரத்­தி­ன­புரி வைத்­தி­யசா­லையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்­தி­ர­குமார் சுதர்­சனை பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் கைது செய்து விசா­ர­ணைக்­காக அழைத்துச் சென்­றுள்ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரி­யிடம் குறிப்­பிட்டார்.

குறித்த மாணவன் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த விசா­ர­ணை­க­ளி­லேயே மேல­திக விசா­ர­ணையின் பொருட்டு அம்­மா­ணவன் நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்..

தனது அறையில் இரவு நெடு­நேரம் படித்­து­விட்டு, நித்­தி­ரையின் பின்னர் அதி­காலை 3 மணி­ய­ளவில் எழுந்து கழிப்­ப­றைக்குச் சென்­ற­போது, அடை­யாளம் தெரி­யாமல் கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்­கட்­டி­யி­ருந்த இரண்டு நபர்­க­ளினால் சந்­தி­ர­குமார் சுதர்சன் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­டி­ருந்தார்.

கைகள், வாய் என்­பன கட்­டப்­பட்ட நிலையில் மாணவர் விடு­தி­ய­ருகில் உள்ள பற்­றைக்­காட்டில் மயங்­கிய நிலையில் இவர் போடப்­பட்­டி­ருந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து விடு­தியைச் சென்­ற­டைந்த இவரை சக மாண­வர்கள் பலாங்­கொடை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

பின்னர் அவர் அங்­கி­ருந்து இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு மேல் சிகிச்­சைக்­காக அனுப்­பப்­பட்­டி­ருந்தார். அங்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு சனிக்­கி­ழமை அவர் வீடு செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போதேஇ அவரை பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர் விசா­ர­ணைக்­காக கைது செய்து கொண்டு சென்­றுள்­ளனர்.

தான் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் பொலி­ஸா­ருக்கு குறித்த மாணவன் வழங்­கிய வாக்கு மூலம் முரண்­பா­டு­டை­ய­தா­கவும் சந்­தே­கத்­துக்கு இட­மா­கவும் உள்­ள­தாக குறிப்­பிட்ட பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண குறித்த மாணவன் காயங்­களை தானாக ஏற்­ப­டுத்­திக்­கொண்­டாரா என்­பது தொட­ரொபில் கண்­ட­றிய சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கைக்­காக காத்­தி­ருப்­ப­தா­கவும் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் கேச­ரி­யிடம் சுட்­டிக்­காட்­டினார்.

காயங்­களை தானாக ஏற்­ப­டுத்தி பல்­க­லையில் இன மோதல் அல்­லது பாகு­பாடு ஒன்றை தோற்­று­விக்க குரித்த மாணவன் முயற்­சித்­துள்­ள­தாக தாம் சந்­தே­கிப்­ப­தாக குரிப்­பிட்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் குரித்த மாண­வனை தொடர்ந்தும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குரிப்­பிட்­டனர்.

இந்த மாணவன் நேற்று முன் தினம் கைது செய்­யப்­பட்ட விட­ய­மா­னது கிளி­நொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையம் ஊடாக முக­மா­லையில் உள்ள அவ­ரது பெற்­றோ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சப­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாண­வர்கள் தங்­கி­யுள்ள விடு­தியின் கழிப்­ப­றை­யொன்றில் தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் அங்கு கல்வி கற்கக் கூடாது. உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட வேண்டும் என்று உயி­ரச்­சு­றுத்தல் விடுத்து, கொச்சைத் தமிழில் எழு­தப்­பட்ட சுவ­ரொட்­டிகள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

இரண்­டா­வது தட­வை­யாக அத்­த­கைய சுவ­ரொட்­டிகள் இரவு நேரத்தில் ஒட்­டப்­பட்­ட­போதுஇ அந்தக் கழிப்­ப­றைக்குச் சென்­ற­போதே இந்த மாணவன் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்தார்.
இந் நிலையில் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த சம­னல கந்த பொலிஸார் அதே பல்­க­லையில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் யோக நாதன் நிரோஜன் என்ற மாண­வனை கைது செய்­தி­ருந்­தனர்.

எனினும் முன்னாள் புலிகள் இயக்க உருப்­பினர் என்­ப­த­னாலும் அவ­ரது தொலை­பே­சியில் காணப்­பட்ட சில சந்­தே­கத்­துக்கு இட­மான தக­வல்­க­ளாலும் சம­னல கந்த பொலி­ஸாரால் அந்த மாணவன் பயங்­க­ர­வாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டிருந்தார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குரித்த மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கானது அக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.vk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :