எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
பொத்துவில் பிரதேசத்திற்கான உப வலயக் கல்வி அலுவலகம் திறப்பது சம்பந்தமான விஷேட மீளாய்வுக் கூட்டம் 2014.08.02 சனிக்கிழமை பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸீஸ் அவர்களின் தலமையில் அக்/அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ்உதுமாலெவ்வை அவர்களின் பங்குபற்றுதலுடன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத் அவர்களும், உள்சூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அவர்களின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான் ஆசிரியர் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் பொத்துவில் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் எதிர்வரும் 2014.08.12ம் திகதி உப வலயக் கல்வி அலுவலகம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் அம்பாறை மாவட்ட அரசியல் பிரமுகர்களையும் இந்நிகழ்வில் இணைத்துக் கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும் கௌரவ அமைச்சரல் அவர்கள் உப வலயக் கல்வி அலுலகத்திற்கு விஜயம் செய்து திருத்த வேலைகள் சம்பந்தமாக
மேற்பார்வை செய்யப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment