தோல்வியில் முடிந்த போர் நிறுத்தம்! காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஒருநாளில்160 பாலஸ்தீனர்கள் பலி- படங்கள்

இஸ்ரேலுக்கும், காஸாமுனை ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்த சில மணி நேரத்திலேயே தோல்வியில் முடிந்தது.

காஸாமுனையில் ரபா பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்தது. இடைவிடாது குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் குறைந்தது 160 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இத்துடன் சேர்த்து இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,600 ஐ கடந்து விட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான்.

ஹமாஸ் இயக்கத்தினர் 51 ராக்கெட்டுகளை வீசியதுடன், பீரங்கி தாக்குதலையும் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.

மேலும் தங்கள் தரப்பில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காஸாமுனையில் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்துவருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :