ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
ஜனாதிபதி அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லையென்றால் நாட்டுக்காக செய்யவேண்டிய சேவையை செய்துகொண்டிருப்பேன்.
அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கவேண்டும் அதற்கு பின்னரே எங்கு எவ்வாறு போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க முடியும்.
ஜனாதிபதியின் சகோதரர் என்ற போதிலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிழையாக பயன்படுத்த மாட்டேன். மக்களின் நலன்களை உறுதி செய்வதே எனது நோக்கம் என்றார்.

0 comments :
Post a Comment