மாநகர முதல்வர்கள், உறுப்பினர்களுக்கான இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை இந்தியா ஹைதராபாத் கிராமிய அபிவிருத்தி தேசிய கல்வி நிறுவனத்தில் (National Instriture of Rural Developmet NIRD) எதிர்வரும் 2014.08.04 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சிப் பட்டறையில் மாத்தறை மாநகர முதல்வர் எச்.எஸ். நந்தன, தம்புள்ளை மாநகர முதல்வர் எச்.எச்.ஏ.டீ.ஜே.எச். ஒபாதா, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.ஏ. ஸக்கி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ், எம்.எஸ்.உமர் அலி, ஏ.அப்துல் பஷீர், ஏ.அமிர்தலிங்கம், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர் கே.ஜீ. விஜயரத்ன மற்றும் அநுராதபுர மாநகர சபை உறுப்பினர்களான ஏ. தனநாயக்க மற்றும் எஸ்.பி. ஜயவர்தன ஆகியோரும் நாளை 2014.08.03 இந்தியா பயணமாகவுள்ளனர்.
இப்பயிற்சிப் பட்டறை ஹைதரபாத், பேங்லூர், மைசூர், ஊட்டி ஆகிய இடங்களில் இரு வாரங்கள் இடம்பெறவுள்ளது. இதற்கான முழு அனுசரனைகளையும் இந்திய அரசு மேற்கொள்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment