அமெரிக்கா தவறான தகவல்களை வழங்கி வருகிறது -வெளிவிவகார அமைச்சு

லங்கையின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அமெரிக்கா தவறான தகவல்களை வழங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது. 

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து இங்குள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த எச்சரிக்கை தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஜனநாயக நாடொன்றில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் ஆகியன முக்கியமான விழுமியங்கள், இலங்கையின் அரசமைப்பினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட இந்த உரிமைகளை பயன்படுத்துவதற்கு இந்த நாட்டு மக்களுக்கு உரிமையுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அமெரிக்க தூதரகத்தையோ, தூதுவரையோ, அதிகாரிகளையோ, மக்களையோ இலக்கு வைத்து எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை. எனினும் அமெரிக்கா அவ்வாறு குறிப்பிட்டுள்ளது. காஸா நிலவரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரசியல் கட்சியொன்றே ஏற்பாடு செய்தது, இது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. 

இலங்கையில் மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள் அதிகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இந்தக் கருத்திற்கான அடிப்படை என்னவென்று தெரியவில்லை.

இவ்வாறு உணர்வுகள் அதிகரிப்பதற்கான அடிப்படை காரணம் என்னவென அமெரிக்கா ஆராயவேண்டும். இலங்கையின் இராஜதந்திரிகள் அவர்களது குடும்பத்தினர் உடைமைகள் என்பவற்றை பாதுகாக்க வியன்னாப் பிரகடனத்தின் படி சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர். பெருமளவு அமெரிக்கப் பிரஜைகள் இலங்கையில் வாழ்கின்றனர். மேலும் பலர் வந்து செல்கின்றனர். 

அவர்களுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :