ஆசியாவின் சிறந்த சிரேஷ்ட தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ- பான் கீ மூன்

சியாவின் சிறந்த சிரேஷ்ட தலைவர் எமது நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாட்டின் அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்புத் தொடர்பான ஊடகச் செயலமர்வு நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதியுடையவர் யார் என்று கேட்டால் இன்றைய ஜனாதிபதியையே நான் கூறுவேன். இந்த நாடு இன்று ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னேற்றம் கண்டு வருகின்றது. வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு வடக்கு மாகாணத்திற்குத் தேவையானவற்றை பெற்று செயற்படுத்தி வருகின்றார். அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் அவர் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி வருகின்றார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

தெற்கில் இருக்கின்ற வசதி வாய்ப்புக்களை வடக்கு மக்களும் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்குடன் அதனைப் பெற்றுத் தருவதில் வடக்கு ஆளுநர் துடிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். வடக்குத் தெற்கை இணைக்கும் பாலமாக அபிவிருத்திச் செயற்பாடுகள் அமைகின்றன. அபிவிருத்தியின் ஊடாக தெற்கும் வடக்கும் இணைகின்றன.

உலகைப் படைக்கக் கூடிய ஆயுதமாக பேனா விளங்குகின்றது. அதேபோல், அழிக்கக்கூடிய ஆயுதமாகவும் பேனா விளங்குகின்றது. ஊடகவியலாளராகிய நீங்கள் நன்மையான விடயத்திற்காக அதனை பயன்படுத்த வேண்டும்.சில விடயங்கள் இந்த நாட்டினை அழிக்கும் நோக்கில் சர்வதேசத்தின் செயற்பாடாக இடம்பெற்று வருகின்றன. இதற்கு ஊடகவியலாளர்கள் இடம்கொடுக்க கூடாது. மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தில் ஜனாதிபதி ஊடகத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஆசியாவின் பலம் மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஜனாதிபதி அனைத்து மக்களையும் ஒருசேர இணைத்து அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். மக்களின் ஆணை மூலம் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்பட்டுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டிற்காக அனைவரும் இணைந்து பணியாற்றி கரங்களைப் பலப்படுத்த வேண்டும். பேதமின்றி ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் செய்பட்டு இந்த நாட்டினை அபிவிருத்திப் பாதை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு ஊடகவியலாளர்களது பங்களிப்பு அவசியமானதொன்றாக விளங்குகின்றது.

இந்த நாட்டில் அனைவரும் ஒன்றித்து வாழ்வதே அனைவரினதும் குறிக்கோள். அதன் ஒருபடியாகவே இன்று வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களை இணைக்கக் கூடிய ஓர் செயலமர்வு இடம்பெறுகின்றது. இந்த நாட்டில் இன்று ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் உள்ளனர். 

உலகில் இன்று ஊடகம் இன்றி மனித குலம் வாழ முடியாது என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ருவிட்டர், முகநூல், யூரியூப் என அனைத்து இணையவழி ஊடகங்களிலும் மனிதர்கள் இணைந்துள்ளனர். இத்தகைய ஊடகவியலாளரினால் உலகம் இன்று சுருங்கி ஓர் கைத்தொலைபேசிக்குள் வந்துவிட்டது.

இந்த நாட்டு தெற்கு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்குவதுபோல் வடக்கிற்கும் வழங்குகின்றோம். இதன் மூலம் நல்ல உறவுகளையும் தகவல் பரிமாற்றத்தையும் வளர்க்க முடியும்.

வடபகுதித் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், நடேசபிள்ளை போன்ற மூத்த தலைவர்களுடன் நல்ல உறவில் இருந்துள்ளேன். 1960 களில் நானும் ஓர் ஊடகவியலாளனாகவே செயற்பட்டேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :