இஸ்ரேலுக்கெதிராக சாய்ந்தமருதில் கண்டன ஊர்வலம்

எம்.வை.அமீர்-
 ஸ்லாத்தின் புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீதும் இஸ்ரேல் ஈவிரக்கமின்றி மிலேச்சத்தனமாக தொடுத்துள்ள கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் மனிதப்படுகொலைகளைக் கண்டித்து, இன்று (2014-08-01)ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது மக்களால், கண்டன ஊர்வலமும், ஊர்வலத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபை,இலங்கை அரசாங்கம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுப்புவதற்காக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எ.எல்.எம்.சலீம் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இஸ்ரேலை கண்டித்தும் பாலஸ்தீன காஸா பகுதியில் அதிகமாக சிறுவர்களும் பெண்களும் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டன வாசகங்கள் முழங்கியதுடன் பாலஸ்தீன காஸா மக்களுக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இஸ்ரேல், பாலஸ்தீன முஸ்லிம்கள் மீதும் ஈவிரக்கமின்றி மிலேச்சத்தனமாக மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிகின்றோம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் பக்கச்சார்பான ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும், முஸ்லிம் அரபு நாடுகள் பாலஸ்தீனுக்கு பகிரங்கமாக நேசக்கரம் நீட்ட வேண்டும் என்பன போன்ற வாசகங்களும் சொற்பிரயோகங்களும் இங்கு எந்தப்பட்டிருந்த பதாதைகளின் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :