த.நவோஜ்-
கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகை மின் விசிறிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி, வைத்திய நிருவாக உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பாரூக், வைத்தியசாலையின் அதிகாரிகளும், அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன், நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் கருத்து தெரிவிக்கையில்!
எமது பணி இனம், மதம் என்பவற்றைக் கடந்து மனித குலத்தின் நன்மைக்கான பணிகளை முன்னெடுப்பதில் எப்பொழுதும் உங்களைப் போன்றவர்களுடன் ஒத்துழைக்க சித்தமாக இருக்கிறோம். நீங்களும் எங்களுக்கு ஆலோசனைகளையும், ஆரோக்கியமான திட்டங்களையும் வழங்கும் போது அவற்றை நிறைவேற்றித் தருவதில் முன்னுரிமை காட்டுவோம் என தெரிவித்தனர்.
ஏழை எளிய மக்களுக்கான இத்தகைய அரச மருத்துவ மனைகளின் குறைபாடுகளை இவ்வாறான சமூக சேவைகள் அமைப்பு நிறைவேற்றும் போது அதற்கான சமூக அங்கீகாரமும், சமூக நல்லிணக்கமும் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.
அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் ஏனைய உறுப்பினர்களையும் மன நிறைவோடு எனது சார்பிலும், வைத்தியசாலையின் ஊழியர்களது சார்பிலும் பராட்டுகின்றோம் என வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்தார்..jpg)
0 comments :
Post a Comment