த.நவோஜ்-
ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கான பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திவிநெகும, ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிராமிய பாடசாலை அபிவிருத்தி, விசேட வேலைத்திட்டம் போன்றவை ஆராயப்பட்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்போது சமூக சேவைகள் அமைச்சால் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு சுயதொழில் உதவிக் கொடுப்பனவாக தலா முப்பதாயிரம் ரூபாய் படி மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
முதல் கட்ட தற்செயல் நிவாரணப் பொடுப்பனவாக 06 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் படி வழங்கப்பட்டதுடன், வலது குறைந்தோருக்கு 06 சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.

.jpg)
0 comments :
Post a Comment