வாக்கினை எதிர்பார்க்காமல் சேவை செய்வதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்-பஷீர்

த.நவோஜ்-

கிழக்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்காத போதும் வாக்கினை எதிர்பார்க்காமல் அதிகமான தொகையினை அபிவிருத்திக்காக ஒதுக்கி அரசாங்கம் தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் என பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவரது தலைமையில் இடம்பெற்ற போது தலைமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

அழிவடைந்த பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நோக்கில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,326 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. அது மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலகங்களுக்கு மக்களின் தேவைகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இவர்களுக்கு அபிவிருத்தி வேலைகள் செய்ய தேவையில்லை என்று எதுவும் பார்க்காமல் அழிவடைந்த பிரதேச மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் மஹிந்த ராஜபக்ஷ தலையிலான அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இக்கூட்டத்தில் திவிநெகும ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு, கிராம பாடசாலை அபிவிருத்தி, விஷேட வேலைத்திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு திட்டங்கள் முன்மொழியப்பட்டு அனைத்து வேலைகளும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்கள், பிரதேச திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :