அஸ்ரப் .ஏ. சமத்-
57வது அரச சாகித்திய விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 03ஆம். திகதி பி.பகல். 02.30 மணிக்கு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மும்மொழிகளிலான 152 நூல்களின் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சாகித்திய விருதுகள் வழங்கி வைக்கப்படும். சிங்கள மொழி முலம் 98, ஆங்கில மொழி முலம் 29 தமிழ் மொழி முலம்20, நூல்களுக்கு இம்முறை அரச சாகித்திய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இன்று(14)ஆம் திகதி செத்சிரிபாயாவில் உள்ள கலா மற்றும் கலாச்சார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் டி.பி. எக்கநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ், சிங்கள ஆங்கில நூல்கள் 1592 நூல்கள் கலாச்சாரத் திணைக்களத்தின் அரச சாகித்திய தேர்வுக்குழுவுக்கு கிடைக்கப்பெ;றறன. அதில் 164 தமிழ்; நூல்களும், 103 ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. இந்நூல்கள் 49 பக்கங்களை மேற்பட்டதாகவும், அரச ஆவண நூலகத்தில் பதியப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
அதற்கமைய பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த 7 மாத காலமாக ஒன்று கூடி சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்துள்ளனர். வருடா வருடம் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களில் 175 நூல்களை கலாச்சார திணைக்களம் கொள்முதல் செய்கின்றது. இதற்காக அமைச்சு 8 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந் நூல்களின் தேர்வுகள் விருதுகள் வழங்கும் அன்றே தெரிவிக்கப்படும். சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், கவிதை, இளைஞர்களின் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், என பல பிரிவுகளில் மும் மொழிகளிலும் விருதுகள் வழங்கப்படும்.என அமைச்சர் டி.பி. எக்கநாயக்க தெரிவித்தார். இவ் ஊடக மாநாட்டின்போது அமைச்சின் செயலாளர் வசந்த எக்கநாயக்க, பணிப்பாளர், சாகித்திய தேர்வு குழுவின் தலைவர் பேராசிரியர் சமன்ந்த கேரத் கலந்து கொண்டனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment