சலீம் றமீஸ்-
பொத்துவில் பிரதேச கல்வி அபிவிருத்தி கருதி பொத்துவிலில் உப வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளனர்.
இத்திறப்பு விழாவில் ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதார சுதேசய வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர். பிரதேச சபை உறுப்பினர்கள,; அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் மஜீட் மற்றும் கல்வியிலாளர்கள் எனப் பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக உப வலயக் கல்வி அலுவலகத் திறப்பு விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பொத்துல்; உப வலயக் கல்வி அலுவலகம் திறக்கப்படுவது தொடர்பில் அமைச்சர் உதுமாலெப்பை குறிப்பிடுகையில், பொத்துவில்; இப்பிரதேச மக்களின் மிக நீண்ட காலத் தேவையொன்று உப வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் நிறைவு செய்யப்படுகிறது என்றார்.
.jpg)
0 comments :
Post a Comment