TNA இரண்டாகப் பிளவுபடுகிறது!

திர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதெனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் ஒருபகுதியினர் கூற, அடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து நின்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் கூட்டமைப்பு இரு பிரிவாக பிளவுபட்டுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதான இரு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட மாட்டாது என்பதால் வேறான ஒருவரை நியமித்து தமிழ் மக்களின் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பலமாக குரல் எழுப்பியுள்ளனர். 

ஆயினும், அடுத்த சாரார் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஒப்பந்த அடிப்படையில் சில விடயங்களை முன்வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். 

இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :